ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு!! (வீடியோ இணைப்பு)
றம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து கண்டி - கொழும்பு தொடருந்து மார்கத்தை றம்புக்கனை பகுதியில் மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க றம்புக்கனை காவல்துறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை ஊடக பேச்சாளர் கூறுகையில், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டபோது, ஆர்ப்பாட்டகாரர்கள் காவல்துறையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொணடுவர காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயமடைந்துள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதல் காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
Sensitive Content :#Rambukkana clash video.#Srilanka . One dead and several critical now pic.twitter.com/vs6EzUBUsB
— Vajira Sumedha? ?? (@vajirasumeda) April 19, 2022
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        