கச்சத்தீவுக்கு இலங்கையரை ஜனாதிபதியாக்கிய ஈழ தமிழரின் வரலாறு! ஜெயபாலன் வெளிப்படை
இலங்கைத் தமிழர் சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்கள், வரலாற்றுப் பின்னணி மற்றும் உணர்ச்சி நிலைகளை திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்துவதில் ஈழத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர், கவிஞர், சமூகவியலாளர் மற்றும் நடிகர் ஜெயபாலன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றமையை நாம் காணக்கூடியதே.
அவரது படைப்புகள் சமூகத்தின் நிஜ முகத்தைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, உள்நாட்டு மோதல்களின் தாக்கம், இடம்பெயர்வு, அகதி வாழ்க்கை மற்றும் அடையாளப் போராட்டம் போன்ற முக்கிய அம்சங்கள் அவரது படைப்புகளில் பிரதிபலிக்கப்படுகின்றன.
இது இலங்கைத் தமிழர்களின் குரலை வெளிக்கொணரும் ஒரு முக்கிய கலை வடிவமாக பார்க்கப்படுகிறது. மேலும், அவரது திரைப்படங்கள் சமூக பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, புதிய தலைமுறைக்கு வரலாற்று நினைவுகளை பரப்பும் ஒரு ஊடகமாகவும் செயல்படுகின்றன.
இதன் மூலம் இயக்குநர் மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் உறுதியான உணர்ச்சி மற்றும் சிந்தனை சார்ந்த பிணைப்பு உருவாகியுள்ளது. அதேவேளை, திரைப்படங்கள் வழியாக சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் கலாச்சார பாதுகாப்பு போன்ற கருத்துகளும் வலியுறுத்தப்படுகின்றன.
இவ்வாறன படைப்புக்களை ஈழத்தமிழர்கள் சார்பில் தந்த ஜெயபாலன், ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் அக்கிணி பார்வை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தெரிவித்த கருத்துக்களை வெளிப்படுத்தகிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |