நாட்டில் வீழ்ச்சியடையும் மற்றுமொரு உற்பத்தி!
13 ஆண்டுகளின் பின்னர் தேயிலை உற்பத்தியானது விழிச்சிபோக்கில் பதிவாகியுள்ளதாக தேயிலை சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தேயிலை உற்பத்தி 20 வீதத்தில் விழிச்சியடைந்துள்ளதாக தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளது.
அகக்குறைந்த உற்பத்தியாக 2009 பெப்ரவரி 12.8 கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. அதற்கு பின்னர் மாதமொன்றில் உற்பத்தியான ஆகக்குறைந்த உற்பத்தியாக கடந்த மாதம் காணப்படுகின்றது என தரவுகள் தெரிவிக்கின்றன.
இரசாயன உரத்தின் தடையாலேயே தேயிலை உற்பத்தியில் இவ்வாறான ஓர் விழிச்சி ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
இதேவேளை, கடந்த அக்டோபர் மாதம் உரத்தடை நீக்கப்பட்ட போதிலும் உரம் இறக்குமதி செய்ய நாட்டில் டொலர் பற்றாக்குறை உள்ளதால் இந்நிலை தொடர்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ் உர பிரச்சினைக்கு முன்னர் நாட்டில் வருடாந்தம் தேயிலை உற்பத்தியின் மூலம் 1.3 பில்லியன் வருமானம் பெற்று வருவதாகவும் அது குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
ரஷ்யா உக்கிரைன் போர் நாட்டின் தேயிலை வருமானத்தில் மேலும் பாதிப்பு செலுத்துகின்றன.
தேயிலை உற்பத்தியில் 10 வீதமான உற்பத்தியை ரஷ்யா மற்றும் உக்கிரைன் கொள்வனவு செய்யும் நிலையில் தற்பொழுது அக்கொள்வனவு நடைபெறாமையால் தேயிலை உற்பத்தியால் கிடைக்கும் வருமானம் வீழ்ச்சியடைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
