வெளிநாடொன்றில் இலங்கை இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (United Arab Emirates) வசிக்கும் இலங்கையர் ஒருவர் அந்நாட்டில் நடந்த லொத்தர் குலுக்கலில் ஒரு லட்சம் திர்ஹம்களை வென்றுள்ளார்.
100,000 திர்ஹம் இலங்கையின் தற்போதைய நாணய பெறுமதியின்படி சுமார் 83 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.
29 வயதான யாசித பிரசன்ன என்ற இளைஞரே இவ்வாறு லொத்தசீட்டுக் குலுக்கலில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளார்.
மிகவும் உற்சாகம் அடைந்தேன்
வெற்றி பெற்ற நிலையில் கருத்து தெரிவித்த இளைஞன், இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, பின்னர் UAE லொத்தரில் பதிவு செய்தேன்.

நான் நேரடி குலுக்கலைப் பார்க்கவில்லை. எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, அதில் நான் 100,000 திர்ஹம்களை வென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். அம்மா மற்றும் அப்பாவோடு இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளேன். நான் ஒரு தொழிலில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளேன்.
அடுத்தகட்டமாக 100 மில்லியன் திர்ஹாம் பரிசை நோக்கி தனது கனவுகளைத் துணிச்சலுடன் வளர்க்கும் நடவடிக்கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 20 மணி நேரம் முன்