மேற்குலக நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தாவது தீர்வு வழங்குங்கள் - அரசுக்கு சிறிதரன் இடித்துரைப்பு
people
house
project
By Vanan
வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட மாதிரி கிராமங்களுக்கான வீட்டுத்திட்டத்தை நிர்மாணித்து முடிப்பதற்கு தேவையான நிதியை அரசாங்கம் எப்போது விடுவிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கில் மாத்திரமன்றி, கிழக்கிலும் மலையகத்திலும் பல்வேறான வீட்டுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு இடை நடுவில் கைவிடப்பட்டதால், பெரும்பாலான மக்கள் கொட்டில்களில் வாழ வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரை நிகழ்த்திய சிறிதரன், வீட்டுத் திட்டம் குறித்து மேற்குலக நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி