வரலாற்று சாதனை படைத்த நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம்!!
வடக்கில் இருந்து முதல் கழகமாக சென்மேரிஸ் கழகம் சிறிலங்கா பிறீமியர் லீக்கிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
பிரிவு ஒன்றில் ஆடி வந்த சென்மேரிஸ் அணி கடந்த முறை சுப்பர் 6 ற்கு தகுதி பெற்றதன் அடிப்படையில் பிறீமியர் லீக் கால்பந்தாட்ட போட்டியில் ஒர் கழக மட்ட அணி தெரிவாகி இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க ஓர் விடயம் ஆகும்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன நடாத்தும் கால்பந்தாட்ட போட்டி
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் தொழில்முறை கழகங்கள் மோதும் இந்த பிறீமியர் லீக் கால்பந்தாட்ட போட்டியில் 2 வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கி தொடரில் பங்குபற்றாலாம்.
சொலிட், மாத்தறைசிட்டி, ஜாவாலேன், பெலிக்கன்ஸ், சௌன்டர்ஸ், கிறிஸ்டல்பலஸ், நெகோம்புயுத், சுப்பர்சன் ஸ்ரீலங்கா காவல்துறை, செரண்டிப், இலங்கை போக்குவரத்து சபை அணி மொரகஸ்முல்லை, நியூஸ்ரார், சென்மேரிஸ் ஆகிய 14 அணிகள் குறித்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.
இதில் வடக்கில் இருந்து முதல் அணியாக யாழ் நாவாந்துறை சென்மேரிஸ் அணி தொரிவாகியுள்ளது.
சென்மேரிஸின் முதல் போட்டி
முதல் போட்டியில் (05.06.2022) குருணாகல் மைதாத்தில் செரன்டிப் அணியுடன் மோதிய சென்மேரிஸ் அணி 4:0 என புள்ளிகளின் அடிப்படையில் தோல்வியடைந்தது.
சென்மேரிஸின் இரண்டாவது போட்டி
தொடர்ந்து அதே மைதானத்தில் இலங்கை போக்குவரத்து சபை அணியுடன் இரண்டாவது பேட்டியில் (11.06.2022) மோதிய சென்மேரி அணி விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் 1:0 என்ற அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை அணியிடம் தோல்வியடைந்தது.
சொந்தமண்ணில் மூன்றாவது போட்டி
சென்மேரிஸ் அணி தமது மூன்றாவது போட்டியில் சொந்தமண்ணான யாழ் துரையப்பா மைதான்தில் 18.06.2022 பிற்பகல் 03:30 சுப்பர்சன் (Super Sun) அணியுடன் மோதவுள்ளது.

