மஹரகம நகரில் கத்தி குத்து : ஒருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
மஹரகம (Maharagama) பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தாக்குதலை மேற்கொண்ட நபரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சில போதை மாத்திரைகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதலை மேற்கொண்டவர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹரகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்