நட்டமடையும் அரச நிறுவனங்கள்: சூழ்ச்சிகளை அம்பலமாக்கிய ரணில்
நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி. புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய எண்ணம் போல் நாணயம் அச்சிட முடியாது.
2024 வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ஆகவே எதிர்வரும் ஆண்டு அரச வருமானத்தை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
அர்ப்பணிப்பு
2023 ஆம் ஆண்டு 3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது. ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய அதிபர், அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.