விஜய்க்கு வாழ்த்தோடு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்...! சூடுபிடிக்க ஆரம்பமான புதிய ஆட்சி

Vijay M. K. Stalin Tamil nadu TVK
By Shalini Balachandran May 10, 2026 08:32 AM GMT
Report

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராகப் பதவியேற்றதும் விஜய் கையெழுத்திட்டுள்ள மக்கள் நல அறிவிப்புகளை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அதேவேளையில் புதிய அரசு நிதிநிலை குறித்து முன்வைக்கும் விமர்சனங்களுக்குத் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் விஜய்...!

தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் விஜய்...!

மேலாண்மைத் திறன் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே அரசிடம் பணம் இல்லை என்ற ரீதியில் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஸ்டாலின், மக்களுக்குத் திட்டங்களைச் கொண்டு சேர்க்கத் தேவையானது நிதியை விட மேலான மேலாண்மைத் திறனும் மனமும்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜய்க்கு வாழ்த்தோடு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்...! சூடுபிடிக்க ஆரம்பமான புதிய ஆட்சி | Stalin Responds To Cm Vijays Debt Claims Tn

கடந்த ஐந்து ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று, இயற்கை பேரிடர்கள் மற்றும் ஒன்றிய பாஜக அரசின் நிதி நெருக்கடி எனப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில்தான் திமுக அரசு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியது என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

குறிப்பாக, கடந்த அரசு கடனை வைத்துவிட்டுச் சென்றுள்ளது என்ற விஜய்யின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஸ்டாலின், தமிழகத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே இருப்பதாகவும் இது குறித்த முழு விவரங்களும் கடந்த பிப்ரவரி மாத வரவு செலவுத் திட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவிற்கு டெல்லியில் இருந்து பறந்தார் ராகுல் காந்தி!

பதவியேற்பு விழாவிற்கு டெல்லியில் இருந்து பறந்தார் ராகுல் காந்தி!

பல வாக்குறுதிகள்

நிதிநிலை குறித்துத் தெரிந்தே மக்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு இப்போது கஜானா காலி எனக் கூறி மக்களைத் திசைதிருப்பக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இறுதியாக நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன் எனத் தெரிவித்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய், தற்போதுதான் நிர்வாகத்திற்குள் நுழைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், வருங்காலங்களில் எங்களைப் போலவே அரசு நிர்வாகத்தின் நுணுக்கங்களை அவரும் நிச்சயம் கற்றுக்கொள்வார் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாத்தியமற்ற வாக்குறுதி தந்து ஏமாற்ற மாட்டேன்...! முதல் உரையில் உறுதியளித்த முதலமைச்சர் விஜய்

சாத்தியமற்ற வாக்குறுதி தந்து ஏமாற்ற மாட்டேன்...! முதல் உரையில் உறுதியளித்த முதலமைச்சர் விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026