இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!
India
Hinduism
Bihar
By Raghav
இந்தியாவின் (India) - பீகார் (Bihar) மாநில ஜெகானாபாத் மாவட்டத்தின் கோயில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதியில் பாபா சித்தநாத் கோயிலில் இந்த சம்பவம் நேற்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கண்காணிப்பு
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட நெரிசலின் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி