வலி. வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி (படங்கள்)
Jaffna
Douglas Devananda
By Vanan
யாழ் - வலி. வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்று(05.09.2023) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி. வடக்கை பூர்வீகமாகக் கொண்ட சுமார் 49 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை பரப்பு வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
குலுக்கல் முறையில் காணிகள் தெரிவுசெய்யப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி
இப்பிரதேசம் உயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்து வந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த பெப்ரவரி மாதமளவில் விடுவிக்கப்பட்டிருத்ததுடன், விடுவிக்கப்பட்ட அரச காணிகளை முகாம்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

