சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் குமுறல்
covid
money
piyal nishantha
By Vanan
அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே வெட்டப்படுவதால் கொவிட் பணிக்காக சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாத இக்கட்டான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாக சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சரான பியல் நிஸாந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றை ஒழிக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒருமாதச் சம்பளத்தை அர்ப்பணிப்பு செய்ய முன்வந்துள்ளனர்.
எனினும் சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சரான பியல் நிஸாந்த தனது பொருளாதார நிலைமை காரணமாக தனது சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாதென கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி