புத்தாண்டுக்கு குறைந்த விலையில் சாராயம் குடிக்க விரும்பும் இராஜாங்க அமைச்சர்
புத்தாண்டுக்கு குறைந்த விலையில் ‘சாராயம்' குடிக்க வேண்டும்," என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாராயத்தின் விலைகள் அபரிமிதமாக உயர்ந்துள்ளது அதனால் மக்கள் கள்ளச்சாராயத்தை (கசிப்பு) குடிக்க முனைகின்றனர்.
கள்ளச்சாராயம் குடிக்கும் மக்கள்
"சாராய விலை உயர்ந்துள்ளது. மக்கள் தற்போது கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். மதுக்கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் தினமும் 'கசிப்பு' குடிக்க முடியாது.
புத்தாண்டுக்கு முன்னர் விலையை குறையுங்கள்
எனவே புத்தாண்டுக்கு முன்னதாக சாமானியர்கள் அருந்தும் சிறப்பு சாராயத்தின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும்.
ஒரு போத்தல் சாராய விலையை 1500 ரூபாவாக குறைக்க முடியும் என தெரிவித்த அவர் . சாராய உற்பத்திற்கு தேவையான சேர்மானங்களை பெல்வத்தை, செவனகல மற்றும் எதிமலே ஆகிய இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |