அவசரகாலச் சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு பரந்த அதிகாரங்கள் - ஐ.நா வெளியிட்ட தகவல்
சிறிலங்கா அதிகாரிகள் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக குரல் எழுப்புவதற்கும் எதிராக அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.
மார்ச் முதல் இலங்கை எதிர்கொள்ளும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கானோர் கொழும்பிலும் நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்திற்கு பரந்த அதிகாரங்கள்
ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி, ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் பணவீக்கம், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீடித்த மின்வெட்டு மற்றும் சட்டவிரோத நிதிப் பாய்ச்சலைச் சரியாக நிர்வகிக்கத் தவறியதன் எதிரொலியாக வெகுஜனப் போராட்டங்கள் வேகத்தைப் பெற்றன.
இதன்போது, பாதுகாப்புப் படையினர் அவசரகால நடவடிக்கைகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட விரிவான அதிகாரங்களைப் பயன்படுத்தி கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பயன்படுத்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்கினர்.
போராட்டக்காரர்களின் முகாமில் கூட்டு நடவடிக்கை
ஜூலை 22 அன்று தலைநகர் கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களின் முகாமில் காவல்துறை மற்றும் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கையின் போது 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த வாரங்களில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர்கட்சி அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள், தேசிய பாதுகாப்பை ஒரு சாக்குப்போக்காக கொண்டு கருத்து வேறுபாடுகளின் வெளிப்பாடுகளை மூடிவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
