கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியான விபரம்!
Corona
Corona Death
SriLanka
By Chanakyan
நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொகான் சமரநாயக்க (Mohan Samaranayake) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
