கலைஞர் கருணாநிதி சிலைகள் உடைக்கப்படும் : சீமான் பேச்சால் வெடித்தது சர்ச்சை
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின்(karunanidhi) சிலைகள் உடைக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்(seeman) தெரிவித்திருப்பது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டு வருகிறது.
உதவாத திட்டங்களுக்கு கலைஞர் பெயர்
இதை அண்மையில் விமர்சித்து பேசியிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami,), மக்கள் நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், உதவாத திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைத்து கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருந்தார்.

அவரது விமர்சனத்தை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தனர்.
இலங்கை, வங்கதேசத்தில் என்ன நடந்தது
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “அதிகாரம் என்பது நிலையானது அல்ல. இலங்கையிலும், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அதிகாரத்தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என பார்த்து வருகிறோம்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் கூட ஜெகன்மோகன் ரெட்டி அரசின் அனைத்து திட்டங்களுக்கும் தனது தந்தை ராஜசேகர் ரெட்டி பெயரை வைத்தார். ஆனால் என்ன நடந்தது? சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றிருந்தபோதே இங்கே ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் உடைத்து தூக்கப்பட்டன.
வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பதற்றம் : அடித்து நொருக்கப்பட்ட றிசாட் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி
அந்த நிலை தமிழகத்திலும் நடைபெறலாம். தமிழ் மகன் ஒருவன் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் அனைத்தும் பொட்டலாகி விடும்” என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 11 மணி நேரம் முன்