ஹோட்டலில் அமைச்சரின் மகளின் வைரமோதிரத்தை திருடியவர் சிக்கினார்
திருட்டுபோன அமைச்சரின் மகளின் வைரமோதிரம்
அமைச்சரின் மகளுக்கு சொந்தமான வைரம் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணும் அவரது சகாக்ககளும் வார இறுதியில் (13) யால சரணாலயத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற நிலையிலேயே இந்த மோதிரம் திருடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்டவர் மேசன் வேலை செய்பவர் எனவும் குறித்த ஹோட்டலுக்கு அருகில் வேலை செய்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குளியலறை சுவரில் வைக்கப்பட்டது
அமைச்சரின் மகள் ஹோட்டலில் உள்ள திறந்த குளியலறையில் குளிக்கும் வேளை சுவரில் மோதிரத்தை கழற்றி வைத்ததாகவும் பின்னர் அதனை எடுப்பதற்கு மறந்துவிட்டார் எனவும் கிரிந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோதிரத்தை எடுத்த மேசன்
இந்த நேரம் அவ்விடம் வந்த மேசன் வேலை செய்பவர் மோதிரத்தை எடுத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சிசிரிவி கமரா மூலம் நபரை அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
