17 வயது யுவதியை தாக்கிய வளர்ப்புத் தாய் கைது..!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kiruththikan
ராகம, குருகுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் யுவதி ஒருவரை தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அந்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் தாக்குதலுக்குள்ளான 17 வயது யுவதியின் வளர்ப்புத் தாய் எனவும், யுவதியின் தந்தை வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான குறித்த யுவதிக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலதிக விசாரணை
இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்