மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அநுர அரசிற்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம்

Provincial Council A D Susil Premajayantha Anura Priyadharshana Yapa Lasantha Alagiyawanna NPP Government
By Sathangani Aug 17, 2025 04:33 AM GMT
Report

அரசாங்கம் எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகித்த போது தேர்தல்கள் தாமதிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் அவர்களின் ஆட்சியிலும் மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான கருத்தரங்கு கொழும்பில் உள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று (16) நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

சுமந்திரன் அழைப்பு விடுத்த கடையடைப்பு - தமிழரசின் பிரித்தானிய கிளை கடும் எதிர்ப்பு

சுமந்திரன் அழைப்பு விடுத்த கடையடைப்பு - தமிழரசின் பிரித்தானிய கிளை கடும் எதிர்ப்பு

விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்தல் 

இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna), “தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகித்த போது தேர்தல்கள் தாமதிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. பாரிய ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருக்கின்றன.

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அநுர அரசிற்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் | Steps To Hold Provincial Council Elections Soon

ஆனால் தற்போது அவர்களுக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது. எனவே அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும். எதிர்க்கட்சிகள் என்ற ரீதியில் இதனையே நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

5 ஆண்டுகளுக்கு தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணையை வழங்கியிருக்கின்றனர். தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை எந்தளவுக்கு அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு ஆதரவளித்த பெரும்பாலான மக்கள் முன்னர் கொண்டிருந்த நம்பிக்கையை தற்போது இழந்துள்ளனர். இதுவே யதார்த்தமாகும்“ என்றார்.

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா (Anura Priyadharshana Yapa), “மாகாணசபைத் தேர்தல் நாட்டுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். பல ஆண்டுகள் இந்தத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இதுவே சிறந்த காலம் என்று எண்ணுகின்றோம்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தவர்

எதிர்க்கட்சிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோட்டாபய ராஜபக்சவும் (Gotabaya Rajapaksa) மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சி வீழ்ச்சியடைந்தது. எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையே அனைத்தையும் தீர்மானிக்கிறது.

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அநுர அரசிற்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் | Steps To Hold Provincial Council Elections Soon 

நாட்டின் பொருளாதார நிலைமை ஸ்திரமாகக் காணப்பட்டால் மாத்திரமே எந்தவொரு அரசாங்கத்துக்கும் நிலைத்திருக்க முடியும். எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் சகல எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன“ என்றார்.

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவிக்கையில், “புதிய அரசியல் சக்தியொன்று ஆட்சியமைத்துள்ள நிலையில் ஓராண்டுக்குள் அந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு திட்டமிடுவது பொறுத்தமற்றது. அவ்வாறான முயற்சிகளையும் எதிர்க்கட்சிகள் எடுக்கவில்லை.

தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை வைத்து மக்கள் அவர்களை தெரிவு செய்திருக்கின்றனர். எனவே அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். எவ்வாறிருப்பினும் எதிர்கால அரசியலைக் கருத்திற் கொண்டு சகல எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியாக ஒன்று திரட்டும் செயற்பாடுகளையே நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம்“ என்றார்.

நல்லூர் கந்தனின் சந்தானகோபாலர் உற்சவம் இன்று

நல்லூர் கந்தனின் சந்தானகோபாலர் உற்சவம் இன்று

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

இறுப்பிட்டி, திருவையாறு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025