அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை! வலையில் சிக்கிய பாரிய எரிபொருள் மோசடி கும்பல்
கொழும்பு - வெயாங்கொட - வந்துரவ பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவுப் பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த பெரிய அளவிலான எரிபொருள் வியாபாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனத்தினால் அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுவரும் வாகனங்களில் இருந்து இவ்வாறு எரிபொருள் சட்டவிரோதமாக பெறப்பட்டு வந்துள்ளன.
இவ்வாறு வாகனங்களில் இருந்து எரிபொருளை பெறுவதற்காக கெப் ரக வாகனத்தின் பின்புற பகுதியில் சிறிய எரிபொருள் கொள்கலன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட 1 பவுசர் உட்பட மேலும் 5 வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.