வன்கொடுமைக்கு ஆளான பெண் வைத்தியரின் தொலைபேசி கண்டுபிடிப்பு
அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரால் திருடப்பட்ட ஐபோன் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மறைந்திருந்த காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக கல்னேவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புகைப்படங்கள்
கல்னேவ காவல் பிரிவில் உள்ள நிதிகும்ப யாய மற்றும் மஹாமெவ்ன அசபுவ இடையேயான காட்டுப் பகுதியில் இரண்டு காவல் குழுக்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சந்தேகபர் பெண் வைத்தியரின் தொலைபேசியை வலுக்கட்டாயமாக எடுத்து, மிரட்டி, அதன் கடவுச்சொல்லைப் பெற்று பின்னர் அதே தொலைபேசியிலிருந்து அவரது புகைப்படங்களை எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்திருந்தது.
நீதிமன்ற உத்தரவு
இவ்வாறானதொரு பின்னணியில், சந்தேகநபரால் திருடப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்த தொலைபேசி தற்போது மீட்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் இன்று (17) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்