யாழ். நோக்கி பயணித்த பேருந்துகள் மீது தாக்குதல்
கொழும்பில் (Colombo) இருந்து யாழ்ப்பாணம் (jaffna) நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில் சாரதி காயமடைந்துள்ளார்..
அத்துடன் தாக்குதல் வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள் மீது நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணை
கொழும்பில் இருந்து யாழ் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து மீதும், பதுளையில் (Badulla) இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீதும் கிளிநொச்சியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு (Sri Lanka Transport Board) சொந்தமான பதுளை - யாழ்ப்பாணம் பேருந்து, பரந்தன் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
எனினும் இந்தத் தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 4 மணி நேரம் முன்
