ஹக்கீமின் கூட்டத்தில் கல்வீச்சு : பரபரப்பான தேர்தல் களம்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு(sajith premadasa) ஆதரவு தெரிவித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) உரையாற்றியவேளை மேடையே நோக்கி கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மட்டக்களப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரவூப் ஹக்கீம் உரையாற்றிய வேளை திடீரென கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் அவரது பாகாவலர்களும் கட்சியினரும் பாதுகாப்பிற்காக அவரைச் சுற்றி சூழ்ந்து கொண்டனர்.
இதன்போது நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் சஜித் பிரேமதாசவிற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டுமென ஹக்கீம் சுருக்கமாக பேசி முடித்தார்.
இதேவேளை அக்குறணையில் கடந்த 23ஆம் திகதி நடந்த கூட்டத்திலும் ஹக்கீமிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
