அரசியல் நாடகத்தை நிறுத்துங்கள் - பசிலை கடுமையாக சாடிய சனத்
Basil Rajapaksa
Sanath Jayasuriya
Sri Lankan political crisis
By Sumithiran
பசிலால் ஏமாற்றமடைந்த சனத்
பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
சிரிக்கும் விஷயம் அல்ல
“முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விஷயம் அல்ல. எங்கள் நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது, இதற்காக நீங்கள் பொறுப்பேற்கவில்லை. இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள் என அவர் டுவீட் செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த பசில் ராஜபக்ச கடந்த மே மாதம் 09ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததை அடுத்து தனது அமைச்சரவை இலாகாவை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி