உடன் நிறுத்துங்கள் : கல்வியமைச்சரிடமிருந்து அதிபர்களுக்கு உத்தரவு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lankan Schools
By Sumithiran
பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்ளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடும் வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அம்பாறையில் மரதன் ஓடிய மாணவன்
கடுமையான வெப்பம் காரணமாக அண்மையில் அம்பாறையில் மரதன் ஓடிய மாணவன் விழுந்து உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் பெற்றோர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரித்துவரும் வெப்பமான காலநிலை
அதேபோன்று பல இடங்களிலும் மாணவர்கள் மயங்கி விழும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்திற்கும் நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் வெப்பமான காலநிலையே காரணமாகும்.
இந்த நிலையை கருத்தில் கொண்டே கல்வியமைச்சர் மேற்கண்ட ஆலாசனையை வழங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி