மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கைது : ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கடும் கண்டனம்

United Human Rights United Nations Tamils Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Shadhu Shanker Dec 02, 2023 07:48 AM GMT
Report

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த மற்றும் அதில் பங்கேற்றவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த மற்றும் அதில் பங்கேற்றவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளும் குடிசார் செயற்பாட்டாளர்களும் குறித்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில், தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

பயங்கரவாத தடைச்சட்டம்

 தமிழர் தாயகப்பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டதை தொடர்ந்து, அதில் பங்கேற்றோர், அதனை ஏற்பாடு செய்தோர் உள்ளிட்ட 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கைது : ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கடும் கண்டனம் | Stop Using The Anti Terrorism Act In Sri Lanka

அத்துடன், இந்த சட்டத்தின் கீழ் மேலும் 20 பேர் கைது செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள், மனித உரிமைகளை மீறும் சட்டத்தின் பாவனையை நிறுத்தி வைப்பது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு மாறானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

ஐ.நா வேண்டுகோள்

இந்த நிலையில், இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாவனையை கைவிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கைது : ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கடும் கண்டனம் | Stop Using The Anti Terrorism Act In Sri Lanka

இதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்த வகையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச தரநிலை மற்றும் மனித உரிமை விதிகளுக்கு அமைய குறித்த சட்டம் மாற்றப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022