கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
England
By Sumithiran
உலகளாவிய கல்வி இலக்குகளை அடைவதற்கு இலங்கையின் கல்வி முறைமை மற்றும் கருத்தியல் மாற்றங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தேவை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற கல்வி உலக மன்றத்தில் (2023) உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜெய்ம் சாவேத்ராவுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள்
இச்சந்திப்பின் போது, அமைச்சர் பெர்மஜயந்த மற்றும் குளோபல் பணிப்பாளர் ஆகியோர் உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி அணுகுமுறைகள் மற்றும் இலங்கையின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்தினர்.
அமைச்சர் பிரேமஜயந்த இலங்கையில் கற்கும் திறனை விரிவுபடுத்தும் போது தற்போதுள்ள வரம்புகள் மற்றும் சவால்கள் குறித்தும் விளக்கினார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி