வலுவடைகிறது தாழமுக்கம் -இலங்கை சூட்டியுள்ள பெயர்(photos)
Depression
tamilnadu
Bay of Bengal
By Sumithiran
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தென்கிழக்கில் வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற தாழமுக்கமானது (Depression) தற்போது திருகோணமலையில் இருந்து 470km தூரத்தில் காணப்படுகின்றது.
இது அடுத்துவரும் 24 மணித்தியாலத்தில் ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பின்னர் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் கரையோரமாக மெதுவாக நகர்ந்து, அடுத்து வரும் 48 மணித்தியாலத்தில் வட தமிழ்நாட்டை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. சில வேளைகளில் இது ஒரு சூறாவளியாக உருவாகினால் இதற்கு இலங்கையினால் பரிந்துரை செய்யப்பட்ட அசனி (ASANI) எனும் பெயர் சூட்டப்படும்.





1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி