அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு கடும் கட்டுப்பாடு
அரச வாகனங்களை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு விசேட சுற்று நிருபமொன்றை அனுப்பி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதேவேளை, கொழும்பில் நடைபெறவுள்ள விசேட மாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு அரச வாகனங்களில் தலைவர்களை அழைப்பதை கட்டுப்படுத்துமாறு அமைச்சின் செயலாளர் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவிக்கயைில், எரிபொருள் பாவனையை குறைத்து எரிபொருளின் விலையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசாங்க உத்தியோகத்தர்களை அரசாங்க வாகனங்களில் கொழும்பில் கூட்டங்களுக்கு அழைப்பதற்குப் பதிலாக எதிர்காலத்தில் ஜூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தக் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
