பண்டோரா ஆவணங்களால் இலங்கை அரசியலிலும் வெடித்தது சர்ச்சை - அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
investigation
nirupama rajapaksha
pandora documents
By Sumithiran
உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பனடோரா ஆவணங்களால் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாட்டிற்கு இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
அதன்படி, குற்றச்சாட்டுகள் குறித்து ஆழமான விசாரணை நடத்த அமைச்சரவை முடிவு செய்துளள்ளதுடன் உரிய நேரத்தில் விசாரணை குறித்து அறிக்கை வெளியிடப்படவுள்ளது.