அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போது நிலவும் வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளும் வலுப்படுத்தப்படும்.
சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை காவல்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறை அதிகாரிகள் அந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்தாத வழக்குகளையும் தாம் விசாரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொத்மலை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, விபத்துகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நீண்ட தூர பேருந்து சேவைகளில், இரவு நேரங்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
