அமைச்சர்களுக்கு கோட்டாபய விடுத்துள்ள கண்டிப்பான உத்தரவு
minister
gotabaya
strict order
By Jaso
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் வேளையில் தேவையற்ற அரச செலவீனங்கள் குறித்து ஜனாதிபதி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அரசாங்கம் அனுபவிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அமைச்சுகள் தேவையற்ற விதத்தில் பயன்படுத்தும் வாகனங்கள் உட்பட அரசாங்கத்தின் அனாவசிய செலவுகளைக் குறைக்குமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட சுமையை அனுபவிப்பதால் அமைச்சர்கள் தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.