அரச அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பிறப்பித்த கண்டிப்பான உத்தரவு
விவசாய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது
கடந்த காலங்களில் எமது மக்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட காணிகளை திடீரென வன வளப் பாதுகாப்பு, வன ஜீவராசிகள் போன்ற திணைக்களங்கள் தம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அறிவித்து விவசாய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது நல்லதல்ல.
கடந்த காலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து காணிகளிலும் பெரும்போக பயிர் செய்கை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட காணிகள் தொடர்பாக பிரச்சினைகள் இருப்பின், பெரும்போக பயிர் செய்கை நிறைவடைந்த பின்னர் கலந்துரையாடி நியாயமான தீர்வினைக் காணமுடியும். இதுதொடர்பாக வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் தொடர்பான துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் அறிவித்துள்ளேன் ” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், கடற்றொழில் அமைச்சர், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பொருத்தமான வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தளுவல் அடிப்படையில் அனுமதியளித்து வருகி்றேன்.
சரியான ஒழுங்குமுறையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்படும் காலதாமதத்தினை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அதுதொடர்பாக என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர, ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டங்களுக்கு யாரும் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்திலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.