சிம் பாவனை தொடர்பில் கடுமையாகும் சட்டம் - புதிய நடைமுறை
உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாள தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய பட்டியல் நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் மாதத்திற்கு ஒருமுறை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு பெற்றுக்கொடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
புதிய நடைமுறை
ஒருவர் இறந்தவுடன் தொடர்புடைய தொலைபேசி எண்ணைத் துண்டிக்கவும், அவரது தேசிய அடையாள அட்டை எண்ணுக்கு சிம் வழங்குவதைத் தடுக்கவும் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 13 மணி நேரம் முன்
