ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்.: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
ஜப்பானின் வடக்கு கடற்கரையில் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நேரப்படி மாலை 5:03 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் அதன் மையம் பசிபிக் பெருங்கடலில் சான்ரிகு அருகே சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் இவாட் மாகாணம் முழுவதும் கட்டிடங்களை உலுக்கியது, மேலும் ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவுகோலில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 90 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |