போராட்டத்தில் அணி திரளுங்கள் -சிறிலங்கா கிரிக்கெட் ஜாம்பவான் அழைப்பு
சனிக்கிழமையன்று நடத்தப்படவுள்ள அரசாங்கத்திற்கெதிரான பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்கா கிரிக்கட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ரொஷான் மஹாநாம பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
I would like to request all Sri Lankans, irrespective of their ethnic and religious divisions to join the non violent protests planned for the 9th of July for the sake of our own survival and for the sake of the future generations. pic.twitter.com/Aveqb7yZif
— Roshan Mahanama (@Rosh_Maha) July 8, 2022
"எமது சொந்த வாழ்வுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஜூலை 9 ஆம் திகதி திட்டமிடப்பட்ட வன்முறையற்ற போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களையும் அவர்களின் இன மற்றும் மத வேறுபாடுகளின்றி நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாக இது இருக்கலாம். "நான் என் வாழ்நாளில் 2/3 வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன், இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த இடத்தை விட்டுச் செல்ல விரும்புகிறேன்.எனவே, நான் போராட்டங்களில் கலந்துகொள்வேன், ”என்று கூறியுள்ளார்.
அத்துடன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக பதவி விலகுமாறு முன்னாள் கிரிக்கட் அணி தலைவர் சனத் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
“நாம் ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டு மக்களைக் காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள் உங்களை அல்ல. நான் முன்பு சொன்னது போல் இந்த நாட்டு மக்களை மீண்டும் சோதித்து பார்க்காதே,நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்! #GoHomeGota now” என்று கூறியுள்ளார்.
