கனடா செல்ல இருந்த இளைஞன் பலி: மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்
மல்லாவி (Mallavi) - வவுனிக்குளம் (Vavuni Kulam) பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (16) நடைபெற்றது.
கடந்த 29ஆம் திகதியன்று கனடாவுக்கு செல்ல தயாரான நிலையில் காணாமல் போன மல்லாவி - யோகபுரம் பகுதியினை சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞன் மல்லாவி - வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார்.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்நிலையில், குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், காவல்துறையின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்ததுடன் போராட்டக்காரர்கள் மல்லாவி காவல் நிலையம் முன்பு ஒன்று கூடி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |












ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 8 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்