இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழி வரவு செலவுத்திட்டத்தில் கிடைக்கப் பெற்றதன் பின்னரே, தமது கோரிக்கை நிறைவேறியது என்ற அறிவிப்பை வெளியிட முடியும் எனவும் அதுவரை தமது போராட்டம் முடிவடையாது எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும்(Mahinda Rajapaksha), அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்சBasil Rajapaksha) ,எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.
அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அரசாங்கத்தினால் தீர்வொன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது நிறைவேறும் வரை தமது போராட்டம் தொடருமென ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நாடாளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்டத்தில் தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் இன்றைய தினம் வழங்கப்பட்ட உறுதிமொழி குறித்து, அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கம் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை நடத்தி, அதன் பின்னரே கூட்டு அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.