சிறிலங்கா இராணுவ சிப்பாயின் அநாகரிக செயல் : மாணவி மருத்துவமனையில்
Sri Lanka Army
Sri Lanka Police
By Sumithiran
சிறிலங்கா இராணுவ சிப்பாயால் கடத்தப்பட்ட 14 வயதுடைய மாணவியொருவர் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் - நவகத்தேகம , வெம்புவெவ பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியே இந்த கொடூரத்திற்கு இலக்கானவராவார்.
18 வயதுடைய இராணுவ சிப்பாய் கைது
குருவிட்ட , கெமுனுஹேவா படையணியில் பணியாற்றும் வஹரக, தலழுவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இராணுவ சிப்பாயே கைது செய்யப்பட்டவராவார்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டஇராணுவ சிப்பாய் ஆனமடுவ நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி