யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணை

உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழப்பு தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 12 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி