கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி
Sri Lanka Police
Kilinochchi
By Vanan
கிளிநொச்சி - காந்திகிராமம் பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த ராசேந்திரம் ரவிச்சந்திரன்(46) எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மேலதிக விசாரணை
தனது வீட்டில் உள்ள தென்னை மரத்தின் அருகில் மின்சாரக் கம்பிகள் செல்வதனால் மின்சார கம்பிகளுக்கு இடையூறாக இருந்த தென்னை ஓலையை வெட்ட முற்பட்ட வேளை, மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சாரம் தாக்கப்பட்ட நபரை 1990 அவசர நோயாளர்காவு வண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதும், அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்