மட்டக்களப்பில் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் ஊடாக வீசிய மாணவி கைது
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலிலிருந்து குழந்தையை வீசி எறிந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (23) மலசல கூடத்தில் குழந்தையை பெற்ற மாணவியொருவர் யன்னலிலிருந்து குழந்தையை வீசி எறிந்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த மாணவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை பெற்ற மாணவியொருவர் யன்னலிலிருந்து குழந்தையை வீசி எறிந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் (Batticaloa Teaching Hospital) இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 18 வயதுடைய மாணவியொருவரே சம்பவத்துடன் தொடர்புற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வயிற்று வலி
சம்பவதினமான இன்று (23) அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கர்ப்பிணியான இவர், கர்ப்பிணி என தெரிவிக்காது வயிற்று வலி என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, வயிற்றுவலி என தெரிவித்த இவரை சரியான முறையில் வைத்தியர் சோதனையிடாது அவரது சலத்தை எடுத்து சோதனையிட்டு வயிற்று வலிக்கான ஊசி மூலமாக வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்பின், அதிகாலை ஐந்து மணியளில் குறித்த மாணவி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.
மேலதிக விசாரணை
குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் மாணவி குழந்தையை பெற்றுள்ளார் என அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் மாணவிக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த குழந்தையையும் மற்றும் மாணவியையும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்