வடக்கில் அரச வேலைபெற சிறீதர் தியேட்டர் கடிதம் இருந்தால் போதும் -மாணவன் பரபரப்பு தகவல் (காணொளி)
வடக்கு மாகாணத்தில் அரச வேலை ஒன்றை எடுப்பதற்கு சிறீதர் தியேட்டர் கடிதம் ஒன்று இருந்தால் போதும் என பரபரப்பு தகல் ஒன்றை தெரிவித்துள்ளார் மாணவர் ஒருவர்.
கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதர் தியேட்டருக்கு சென்று கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டால், வட மாகாணத்தில் அரசாங்க பணியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதுதான் இன்றைய நிலைமை எனவும் மாணவன் அரசாங்கத்தை பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
5 பேர் பணி புரியவேண்டிய இடத்தில் 50 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இது அரசாங்கத்தில் நடைமுறையாக உள்ளது இதை நிறுத்த வேண்டும். நாட்டின் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென்றால், தனியார்மயமாக்கல் அவசியம். அதனை ஐ.எம்.எப். எடுத்துரைத்துள்ளது.
தனியார்மயமாக்கல் அவசியம்
அத்துடன், 1959ஆம் ஆண்டு அரச மறை 6 சதவீதத்திலும், தனியார் 4 சதவீதத்திலும், அதே போன்று 2009இல் அரசு மறை 10இலும், தனியார் 10 சதவீதத்திலும், 2022இல் அரசு மறை 10 சதவீதத்திலும் தனியார் 15 சதவீதத்திலும் அதிகரிக்கப்பட்டது.
இதிலிருந்து தனியார்மயமாக்கல் என்பது அவசியம் என்று நாம் விளங்கவேண்டும். அதைப் பரிந்துரை செய்தது ஐ.எம்.எப். அது நாட்டினுடைய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறீதர் தியேட்டர் என்பது ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் அலுவலகமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
