ஒன்பதாம் தர மாணவன் மீது பத்தாம் தர மாணவன் கத்திக்குத்து தாக்குதல்
வயங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் பத்தாம் தரம் படிக்கும் மாணவன் ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்கான ஒன்பதாம் தர மாணவன் வத்துபிட்டியலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வயங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒரே வகுப்பில் கற்கும் மாணவியுடனான காதல் உறவின் அடிப்படையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காதல் உறவால் இடம்பெற்ற மோதல்
மாணவியின் வேறு உறவை அறிந்த பத்தாம் வகுப்பு மாணவன், ஒன்பதாம் வகுப்பு மாணவனை பாடசாலையிலும், பாடசாலை முடிந்து பாடசாலைக்கு முன்பும் வைத்து தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.
காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில்
கத்திக்குத்துக்கு இலக்கான மாணவன் தோள்பட்டை பகுதியில் காயமடைந்த நிலையில் வட்டுப்பிட்டியால ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேறி்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |