'என் சாவிற்கு காரணம் ஆசிரியர் ஒருவரே'' தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவன்
வவுனியா பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14வயதுடைய பாடசாலை மாணவன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த சிதம்பரபுரம் காவல்துறையினர் கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
என் சாவிற்கு காரணம்
குறித்த கடிதத்தில் ''என் சாவிற்கு காரணம் தமது பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர்'' என ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டு மாணவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
