பாடசாலை மாணவனின் தொலைபேசியினை பறித்த அதிபர் - தவறான முடிவெடுத்த மாணவன்

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan May 04, 2023 04:12 PM GMT
Report

பாடசாலை மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் தவறான முடிவெடுத்து நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை தன்னை சந்திக்க வேண்டும் என கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மாணவனின் தந்தை அச்சுறுத்தல்

பாடசாலை மாணவனின் தொலைபேசியினை பறித்த அதிபர் - தவறான முடிவெடுத்த மாணவன் | The Principal Took Away The School Student Phone

அதன் பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தை கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காததுடன், தந்தையை கட்டாயம் தன்னை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தொலைபேசியின் ஊடாக மாணவனின் தந்தை அதிபரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். இதனையடுத்து மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பூவரசங்குளம் காவல்துறைநிலையத்தில் அதிபர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இவ் முறைப்பாட்டினை அடுத்து இரு பகுதியினரையும் காவல்துறையினர் அழைத்து பேசி விசாரணை நடத்தியதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே அவமானத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவனின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த மாணவனின் சக வகுப்பு மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு செல்லாமல் பாடசாலைக்கு முன்பாக கூடியிருந்தனர். இதனையடுத்து வலய கல்வி பணிமனை அதிகாரிகள் பாடசாலையில் மாணவனின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களுடனும் கலந்துரையாடியிருந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனையில முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் 12 ஆம் திகதி குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்காக அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்படவுள்ளனர்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பான வலயக்கல்விப் பணிப்பாளரும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி