மாணவர்கள் கதிரைகளை உடைக்க அரசியல்வாதிகளே காரணம் -இலங்கை ஆசிரியர் சங்கம்
G.C.E. (O/L) Examination
Ceylon Teachers Service Union
By Jaso
திம்புலாகல மகுல்தமன மகா வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த நிலையில் வகுப்பறையின் பௌதீக வளங்களுக்கு பாரிய சேதம் விளைவித்த மாணவர்களின் செயற்பாட்டிற்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே காரணமென இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தற்போதைய கல்வி முறையில் போட்டி போடும் மாணவர்களின் அழுத்தத்தை அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் பிரதிபலிப்பதாக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் பொறுப்பேற்க வேண்டும்

பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களால் ஏற்படும் இந்த நிலைக்கு கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத்தில் நாற்காலிகளால் தாக்குபவர்கள்

நாடாளுமன்றத்தில் நாற்காலிகளால் தாக்குபவர்கள் இருக்கும் போது மாணவர்களும் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் இதற்கு முறையான கல்வி சீர்திருத்தமே பொருத்தமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி