தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதித்த மாணவர்கள் கௌரவிப்பு
தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி வாகை சூடிய மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று(08) இடம்பெற்றது.
இம்முறை இடம்பெற்ற தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் அரை மரதனில் 1ம் இடத்தையும், 5000 மீற்றரில் புதிய சாதனையும், 1500 மீற்றரில் 2ம் இடத்தையும் விகிர்தன் பெற்றுக் கொண்டதுடன், பரிதி வட்டம் வீசலில் கிருசிகன் 1ம் இடத்தையும், பளு தூக்கலில் கோசிகா 1ம் இடத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்திற்கு பெருமை
தேசிய மட்ட ரீதியில் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த குறித்த மூவருக்குமான கௌரவிப்பு நிகழ்வு வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா பழைய பேருந்து நிலையத்தருகே மாலை அணிவித்து பான்ட் வாத்தியம் முழங்க வலயக்கல்வி அலுவலக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
மாணவர்கள் கௌரவிப்பு
அதனைத் தொடர்ந்து மூவருக்கும் பொன்னாடை போர்த்தி பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டிருந்தது.

வவுனியா தெற்கு வலயக் கல்வி தள.முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், ஆசிரியர்கள், விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |