கல்விச்சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை
வடமேற்கு தேசிய கல்வி பீடத்தின் மாணவர்கள் அவசர நிலை காரணமாக பிங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய கல்வி பீடத்தின் அனைத்து மாணவர்களும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டுள்ளதுடன், வயிற்றுப்போக்கு மற்றும் அதிக வாந்தி காரணமாக அந்த மாணவர்கள் அனைவரும் இன்று (31) காலை முதல் பிங்கிரிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
25 பெண் ஆசிரியைகள் மருத்துவமனையில் அனுமதி
சுமார் 25 பெண் ஆசிரியைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
இப்பயணத்தின் போது பலர் வெளியில் இருந்து உணவுகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும், இவர்கள் அனைவருக்கும் உணவு விஷம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என வைத்தியர்கள் பரிசோதித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |