ஆசிரியர் பற்றாக்குறை - வலயக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
Monaragala
SL Protest
By Vanan
பிபிலை - கொடிகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பிபிலை வலயக் கல்வி அலுவலகத்தை இன்று(2) முற்றுகையிட்டிருந்தனர்.
போக்குவரத்து தடை
இந்தப் போராட்டம் காரணமாக பிபிலை - மொனராகலை பிரதான வீதியில் சுமார் 05 மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டது.
நீண்ட காலமாக நிலவி வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பிபிலை வலயக் கல்விப் பணிப்பாளர் சுசில் விஜேதிலக தெரிவித்ததை முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி